Home ஆன்மீகம்

யாரிடமும் கோபப்பட வேண்டாம் ! அஷ்டமத்து சனியால் மீண்டும் தொல்லை! குருவால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

செப்டம்பர் மாதம் சூரியன் சிம்மம் ராசியில் பாதி நாட்களும் கன்னி ராசியில் 15 தினமும் சஞ்சரிப்பார்.

தனுசு ராசியில் உள்ள குரு பகவான் வக்ரம் முடிகிறது. 16ஆம் தேதியன்று சூரியன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

ராகு ரிஷபம் ராசிக்கும் கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இந்த மாதம் எல்லா ராஜ கிரகங்களும் அற்புதமாக இருக்கிறது. நிறைய நன்மைகள் நடைக்கப் போகிறது.

சனியும் ஆட்சி பெற்று வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். வேலையில் உற்சாகம் ஏற்படும்.

இந்த மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற போகிறது. இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும் செவ்வாய் வக்ரமடைவதால் கோபம் வரும் கட்டுப்படுத்துங்கள். ராகு இரண்டாம் வீட்டிற்கு வருவதால் நிறைய பணவரவு வரும். செய்யும் தொழிலில் லாபம் கொட்டிக்கொடுக்கும். இந்த மாதம் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

ரிஷபம்
உங்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. நன்மைகள் அதிகம் நடக்கும்.

குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பிரச்சினைகள் நீங்கும்.

செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருந்து வக்ரமடைகிறார். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போனால் சிறப்பு.

வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க மருத்துவ செலவுகள் வரும் கவனம் தேவை.

மிதுனம்
நான்காம் வீட்டில் புதன் உச்சமடைந்திருப்பது சிறப்பு. இதுநாள் வரை உங்க ராசியில் ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு போகிறார். இதுநாள் வரை இருந்த மனக்குழப்பம் இனி நீங்கும்.

அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வரும் உங்களுக்கு குருவின் பார்வையால் பிரச்சினைகள் நீங்கும்.

ராகு, குரு நன்மை செய்தாலும் சனி தடைகளை ஏற்படுத்துவார். 11ஆம் வீட்டு அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வீடு மாற்றம் நிகழலாம். விட்டுக்கொடுத்து போங்க. பயணங்களில் கவனம் தேவை.

கடகம்
உங்க ராசியில் சுக்கிரன் அமர்வதால் பொலிவு அதிகரிக்கும்.

விபரீத ராஜயோகம். ஏழுக்குடைய சனி ஏழில் இருந்து ராசிக்கு வந்துள்ள சுக்கிரனை பார்ப்பதால் திருமண வாழ்க்கை கை கூடி வரும் நல்ல செய்தி தேடி வரும் உங்க வசீகரம் அதிகரிக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமண முயற்சி செய்யலாம். வீடு மனை வாங்கி விற்கும் வகையில் லாபம் வரும். எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.

நினைத்த காரியங்கள் தடங்கள் இன்றி நடைபெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

Exit mobile version