திருமணம் முடித்த கையோடு தன் காதல் மனைவிக்கு ஆரவ் செய்து கொடுத்த சசத்தியம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆரவ்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளரான நடிகை ஓவியா, இவரை தீவிரமாக காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் வெளியானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் ஆரவ், இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆரவுக்கும், நடிகை ராஹிக்கும் சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆரவ் திருமணமான கையோடு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியம் ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பதிவு செய்து, புகைப்படத்திற்கு மேல் இமை போல் காப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆரவ்வின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.