மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார்.

இப்படத்தை தொடர்ந்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்க போகிறார் என ரசிகர்கள் தற்போதே சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

ஆனால் இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தான் விஜய் நடிக்க போகிறார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நான் விஜய்யின் அழைப்பிற்காக காத்து கொண்டு இருக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை லீக்காகி இருக்கிறது என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது இந்தப்படம் கருட புராணம் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தை தழுவி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் வெற்றிமாறன்-நாவல் என்று சேர்ந்து பார்க்கும் போது இது உண்மையாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.