தொலைக்காட்சி மூலம் வெள்ளித்திரைக்கு காலெடி எடுத்து வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சுமார் 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் பணியாற்றி தற்போது ஒரு சில படவாய்ப்புகள் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடிஇவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு சுட்டியாக வலம் வரும் இவர் எப்போதும் துருதுருவென இருப்பார். தற்போது க்ளாமர் பக்கம் செல்லும் டிடி சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி படுமோசமான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில், வெளிநாட்டில் நாம எல்லாம் வேற மாதிரி என்று ஆங்கில பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் குடித்துவிட்டு இப்படி குத்தாட்டம் போடலாமா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.