கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் மருத்துவர் ஒருவர், தன்னுடைய ஒரு வயது மகனை தூரத்தில் இருந்தபடி பார்க்கும் நெகிழ்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த களத்தில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சரின் மகளான திஷாவும் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு திருமணமாகி விக்ராந்த் என்ற மகள் இருக்கிறார், இதனால் தனது ஒரு வயது மகன் விக்ராந்தை தனது தாய் மற்றும் தந்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார்.

அவர் அவ்வப்போது தனது தந்தையின் வீட்டுக்கு வந்து தூரத்தில் நின்றப்படி மகனை பார்த்து செல்வார்.

சமீபத்தில் மகனை பார்க்க சென்ற போது, அம்மாவிடம் செல்ல வேண்டும் என அழுதுள்ளான், இச்சம்பவம் பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

இதுகுறித்து அமைச்சர் சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘என் மகள் டாக்டர் திஷா, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கடந்த 3 நாட்களாக தனது ஒரு வயது மகன் விக்ராந்தை பார்க்கவில்லை. வீட்டில் பாட்டியிடம் (என் மனைவி சாவித்ரி) இருக்கும் விக்ராந்தை திஷா தூரத்தில் இருந்து பார்த்து சென்றார். அப்போது எங்கள் இதயம் கலங்கியது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.