கொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்திற்கு வந்துள்ளது, அதில் மிக முக்கியமான படம் நானியின் V, இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை நடக்க அதை விசாரிக்க டிசிபி ஆதித்யா வருகிறார், அங்கு ஆதித்யா தான் எனக்கு வேண்டும் என்று கொலைக்காரன் எழுதி வைத்துள்ளான்.

அதை தொடர்ந்து மேலும் 4 கொலைகள் செய்யவுள்ளேன், முடிந்தால் கண்டிப்பிடி என ஆதித்யாவிற்கு சவால் விடுகிறான்.

அதை தொடர்ந்து கிரேம் எழுத்தாளர் நிவேதா தாமஸ் உதவியுடன் விசாரணைகளை தொடங்க ஆரம்பிக்கின்றார் ஆதித்யா, அந்த சவால் விடுவது நானி என்று நமக்கு தெரிந்தாலும், நானியை, சுதீர்(ஆதித்யா) எப்படி பிடிப்பார் என்ற ஆடுபுலி ஆட்டமே இந்த வி.

படத்தை பற்றிய அலசல்

நானியின் 25 வது படம் என்றாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆச்சரியம் தான், அதையும் தன் நேச்சுரல் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

சுதீர் மிடுக்கான போலிஸ் அதிகாரியாக வந்து சென்றுள்ளார், நானிக்காக அவர் போடும் திட்டம் என்று முதல் பாதி விறுவிறுப்பாகவே செல்கின்றது.

ஆனால், படத்தின் இரண்டாம் பாதி தான் எந்த ஒரு திருப்பமும் இல்லை, யூகிக்கக்கூடிய கிளைமேக்ஸ், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை என தடுமாறி நிற்கின்றது.

அதனாலேயே இந்த வி ஒரு ஆவரேஜ் படமாக மாறுகிறது, படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சூப்பர்.

க்ளாப்ஸ்

நானியின் நடிப்பு, வழக்கம் போலவே தனக்கான வேலையை கச்சிதமாக செய்துக்கொடுத்துள்ளார்.

சுதீரும் போலிஸ் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பே இல்லாமல் செல்கிறது.

மொத்தத்திக் பரபரப்பாக ஆரம்பித்து விறுவிறுப்பே இல்லாமல் சென்று ரசிகர்களை முழுத்திருப்தி செய்யாமல் விட்டுள்ளது இந்த வி.