முதல் முறையாக நடிகர் சூர்யா ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகயுள்ள சூரரை போற்று.

இப்படம் வரும் அட்டோம்பர் மாதம் 30ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த முடிவு சரியானது அல்ல என்று திரையுலக சார்ந்த பலரும் தங்களது எதிர்ப்புகளை நடிகர் சூர்யாவின் மீது தற்போது காட்டி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் இருந்து லாபமாக கிடைத்த ரு.5 கோடியை திரையுலக சார்ந்தவர்களுக்கும், கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்கும் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார் சூர்யா.

இப்படத்தில் இருந்து ஏற்கனவே சில பாடல்கள் மற்றும் டீசர் வெளிவந்து ரசிகர்களால் வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வரும் அக்டோம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடிய விரைவில் இதனை குறித்து அமேசான் பிரைமில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.