சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி புதன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இரக்கமுள்ள புதன் பகவான் ஞானத்தையும், செல்வத்தையும் கொடுக்கும் நிலையில், சுக்கிரன் சுக போகங்களைக் கொடுக்க வல்லவர்.

இவர்களின் பெயர்ச்சியோடு, ராகு கேது பெயர்ச்சியும் நடந்து எல்லா ராசிக்கு பல வகையில் நன்மையை அளிக்க உள்ளனர்.

புதன் பகவான் கன்னி ராசியில் செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை சஞ்சரிப்பார்.எந்த ராசியினர் எல்லாம் புதன் பகவானால் மிக நல்ல பலனைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்கு புதன் பெயர்ச்சி மிகவும் நல்ல பலனைத் தரும் வகையில் அமைந்துள்ளது. வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப செலவு ஏற்பட்டாலும், அதன் மூலம் நல்ல லாபமும், திருப்பங்களும் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளையும், பதவி உயர்வு பெறலாம். புதிய வேலையைத் தேடுபவர்கள், உங்களுக்கு மனதுக்குப் பிடித்த வேலை அமைய வாய்ப்புள்ளது. உங்கள் பணி மேம்படும், முதலீட்டின் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். அதே நேரம் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம்.

​கடகம்
புதன் கன்னி ராசியில் அமைவதன் மூலம் கலை மற்றும் ஊடக உலகத்துடன் தொடர்புடையவர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பலன்களை பெற முடியும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதால் உங்களின் நம்பிக்கையும், ஆற்றலும் அதிகரிக்கும்.

சமுதாயத்தில் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதில் மும்முரம் காட்டி வெற்றி பெறுவீர்கள். இந்த காலத்தில் நீங்கள் புதிதாக பல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சுவாரஸ்யமான சிலரைச் சந்திக்கக் கூடும். நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்வதன் மூலம் உங்களுக்கு மன நிம்மதியும், இன்பமும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்கு புதன் அதிபதியாக இருப்பதோடு, ராசியில் அவரின் சஞ்சாரம் இருப்பதால் உங்கள் ராசிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் தரும். இதன் மூலம் வணிகர்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். உங்கள் வருவாயின் அதிகரிப்பையும் காண்பீர்கள்.

ஞானத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதனின் இந்த மாற்றம் கன்னி ராசி மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். சமுதாயத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வர்.

தனுசு
புதன் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சி முதலாளிகளுக்கும், நிபுணர்களுக்கும் மிக நற்பலனைத் தருவதாக அமையும். வேலையில் உங்களின் தனித்துவம் தெரியும்.

பல விஷயங்களில் மரியாதை மற்றும் பாராட்டுகளைப் பெறுகிறீர்கள், உறவினர்கள், நண்பர்களின் வருகையால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். புதனின் பெயர்ச்சியால் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.

​மீனம்
புதனின் கன்னி ராசி சஞ்சாரம் மீன ராசிக்கு மிக நல்ல பலனைத் தரும் யோகம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு மேம்படும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும்.

உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தம்பதிகள் வாழ்க்கையில் செழித்து வளர்வீர்கள், உங்களின் தடைப்பட்ட பணிகள் நிறைவடையும். சிலருக்கு வேலை அல்லது சுற்றுலாவிற்காக வெளியூர் செல்வீர்கள்.