தமிழகத்தில் 8 மாதங்களாக கணவரை காணவில்லை என மனைவி தேடிய நிலையில் காதலனை ஏவி மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர், குடும்பத்தினர் ஆத்தூரிலேயே வசித்து வரும் நிலையில் பாலமுருகன் அவ்வப்போது வந்து குடும்பத்தை சந்தித்து விட்டு செல்வாராம்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில மணிமேகலைக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

குழந்தையை பார்த்ததும், தன்னைப்போல் இல்லை எனவும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்போல் இருப்பதாககூறி தகராறில் ஈடுபட்டு சென்ற பாலமுருகனை அன்றிலிருந்து காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதில் உண்மைகள் அம்பலமாகியுள்ளன, அதாவது மணிமேகலைக்கும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கணவர் தன்னிடம் சண்டையிட்டு சென்றதும் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார் மணிமேகலை.

இதன்படி பாலமுருகனை பின்தொடர்ந்த சென்ற மணிகண்டன் அடித்துக் கொலை செய்ததுடன் சகோதரர் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தது தெரியவந்தது.

மேலும் தங்கள் மேல் சந்தேகம் வராமல் இருக்க எலும்புகளை உடைத்து சாம்பலை கரைத்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இதனையடுத்து மணிகண்டன் அவரது சகோதரர் தனசேகர், பாலமுருகன் மனைவி மணிமேகலை ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.