தமிழகத்தில் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்(32). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பழனி என்ற அண்ணன் உள்ளார்.

இந்நிலையில், செந்திலுக்கு அவருடைய அண்ணன் பழனியின் மனைவியுடன் முறையற்ற பழம்மக் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் விரக்தியடைந்த செந்திலின் முதல் மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

இதன் பின்னர் செந்தில் இரண்டாவாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளன.

இந்த சூழலில் செந்தில் தனது சகோதரன் பழனியின் மனைவியுடன் முறையற்ற பழக்கத்தை கைவிடாமல் இருந்து வந்துள்ளார். இதனால் செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு செந்தில் தனது அண்ணன் மனைவியுடன் பேசி கொண்டிருந்திருக்க, இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த பழனி, தம்பி செந்திலை கண்டித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பழனி, தம்பியை இரும்பு கம்பி மற்றும் சிமென்ட் கல்லால் கொடூரமாக தாக்கியதால், சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், செந்திலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தலைமறைவான பழனியை கைது செய்தனர்.

பழனியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், எனது தம்பி செந்தில் எனது மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்து வந்தார்.

பல முறை கண்டித்தும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடமறுத்துவிட்டார். இந்த தவறான பழக்கத்தால் வெளியில் என்னால் தலைகாட்ட முடியாத நிலை இருந்தது. அத்துடன். எனது மனைவியுடன் செந்தில் இருந்ததால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.