சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நடிகைகளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் படங்களில் படு கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டிவருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார்.

கடந்த சில மாதமாக ஸ்ருதி தனது உடல் தோற்றம் மற்றும் நிறத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வந்தார். இதற்காக பிரத்யேமாக உணவுமுறை மாற்றம், பயிற்சி மேற்கொண்டார். அவ்வப்போது ஆங்கில இதழ்களின் அட்டை படங்களுக்கு கவர்ச்சியாக போஸ் தந்தவர் அதிலிருந்தும் ஒதுங்கி இருந்தார்.

ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர்.சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் புடவை அணிந்து கொண்டு சொக்க வைக்கும் பார்வையை வீசியபடி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிக் ஏற்றியது.

இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு டீப் லோ நெக் உடையில் கையை வைத்து மைக் இல்லாமல் பாடுவது போல ஒரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எதை பார்த்தாலும் தப்பு தப்பாவே தெரியுது டாக்டர் என்று கூறி வருகிறார்கள்.