ஒரு காலத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்ட கொமடி நடிகர் யோகி பாபு தற்போது கொமடி நடிகராக கலக்கி வருகின்றார்.

அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்த இவர், யாருடைய தயவும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்தார்.

இவரது தாய் விசாலாட்சி. தந்தை விஸ்வநாத் இவர் 24 வருடங்களாக ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில், பல கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு தனக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை தான் இப்போது பார்க்க போகிறோம்.

யோகி பாபு தனது வீட்டின் கிரகபிரவேசத்தின் போது பிக்பாஸ் ஆர்த்தி மற்றும் அவருடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், முருகன் பக்தரான யோகி பாபு தனது பூஜை அறை முழுவதும் இருக்கும் முருகன் புகைப்படத்தினையும் காணலாம்.