பிரித்தானியாவில் வாழும் 50 வயது பெண் ஒருவர் மதுபானம் வாங்கச் செலும்போது, அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளார் கடைக்காரர்.

கவண்ட்ரியில் வாழும் ராஜன் கில்லுக்கு (50) ஒரு முறை அல்ல, அடிக்கடி இப்படி நடப்பதுண்டு.

அவர் சின்னப்பெண் என்று எண்ணி, அவர் மதுபானம் வாங்கும் வயதுடையவரா என்பதை உறுதிசெய்ய கடைக்காரர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்பார்களாம். காரணம் ராஜன் கில்லின் புகைப்படத்தைப் பார்த்தால் புரியும்.

ராஜன் கில்லுக்கு, நீலம் (25), ஜாஸ்மின் (19) என இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ஆனால், புகைப்படத்தைப் பார்த்தால் அந்த பெண்களின் சகோதரி போல் இருக்கிறார் ராஜன் கில்.

இதனால் எப்போது கடைக்கு போனாலும் அடையாள அட்டையையும் உடன் கொண்டு செல்கிறாராம் அவர்.

அத்துடன், ராஜன் கில்லின் கணவர் ஹர்பிரீத் மனைவியை விட 10 வயது இளையவர். ஆனால், புகைப்படத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.

இத்தனைக்கும், செயற்கையாக அறுவை சிகிச்சை செய்து உடலில் எந்த மாற்றமும் செய்யவில்லை ராஜன் கில்.

யாராவது, இது உங்கள் அக்காவா என்று கேட்டால், மகள்கள் கேலி செய்கிறார்களாம், ஆனால், அதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்கிறார் ராஜன் கில்.