தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா இவர் 2001ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தனது நடிப்பு திறனை சிறப்பாக வழிகாட்டி அதன் மூலமாக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமான நடிகை கடந்த 2018 ஆம் ஆண்டு ரகசியமாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ – என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”.

எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார். 500 நபர்கள் மற்றும் 200 நடனக் கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டது.

நடிகை ஸ்ரேயா மிகவும் திறமை வாய்ந்த பெல்லி டான்சர். இவர் மீண்டும் கவர்ச்சி டான்ஸ் ஆடவந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அம்மணியின் இடுப்பு டான்சை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.

ஆனால், என்னதான் கல்யாணம் கட்டிக் கொண்டாலும் தனது கவர்ச்சியில் மட்டும் இதுவரை பஞ்சமே வைத்ததில்லை அந்த அளவுக்கு தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.