வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடித்து வெளிவந்த படம் பொல்லாதவன்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆடுகளம் எனும் படத்தில் இணைந்தார்கள்.

இதனை தொடர்ந்து வடசென்னை அதன்பின் அசுரன் என இதுவரை தோல்வியே காணாத வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய போவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் இது வடசென்னை 2 வா, அல்லது அசுரன் 2 வா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஆனால் இது அசுரன் 2வும் கிடையாது, வடசென்னை 2வும் கிடையாது, இது முற்றிலும் புதிய ஸ்க்ரிப்ட் என தெரியவந்துள்ளது.

மேலும் கொராணா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் வேலைகள் துவங்கும் என கூறுகின்றனர்.

இதன்பின் தான் சூரியன் படமும், சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் துவங்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படத்தை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.