அஜித்குமார் மற்றும் போனி கபூர்க்கான கெமிஸ்ட்ரி தற்போது செமையாக இருப்பது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகுவதின் மூலம் தெரிய வருகிறது. இதனால் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது S J சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் வெளிவந்த வாலி படத்தை போனிகபூர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை வாங்கி உள்ளாராம். இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக சிம்ரன்,ஜோதிகா நடித்துருபர்கள். அஜித் வாழ்க்கையை புரட்டி போட்ட படம். இப்பொழுது போனி கபூர் இதனை கையில் எடுத்துள்ளார்.

அதாவது இந்த படத்தில் தனது மகன் அர்ஜுன் கபூரை அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடிக்க வைக்கப் போவதாக திட்டமிட்டுள்ளராம். இது மட்டுமில்லாமல் அஜீத் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படத்தையும் போனிகபூர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸ் வாங்கி உள்ளார்.

அதை விட சுவாரசியம் என்னவென்றால் இதில் ஒரு கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே அசோகா என்ற இந்தி படத்தில் நடித்தவர் அஜித்.

இந்திப்படத்தில் அஜித் குமார் மாஸாக நடிக்கப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

அப்படி ஒரு வேளை நடித்தால் அஜித்குமாரின் மார்க்கெட் இந்தியா முழுக்க போக வாய்ப்பிருக்கிறதாம்.இந்தியில் நடிப்பதற்கு அஜித் உடம்பை குறைத்தால் மட்டும் அழகுக்கு பஞ்சமே இல்லை. அவர் ஏற்கனவே பல முறை சினிமாவிற்காக உடம்பை குறைத்தவர் என்று பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.