ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவசர சிகிச்சை மூலம் சிறிது உடல்நலம் தேறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன், நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்து வருகிறார்கள். நடிகர் பொன்னம்பலத்திடம் அவர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் பொன்னம்பலம் விரைவில் பூரண குணமடைந்து திருப்ப வேண்டும் என்று பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்தி கொண்டிருக்கும் நிலையில், பொன்னம்பலம் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில்” நான் வேலை பார்த்த ஸ்டண்ட் யூனியன் கண்டுகொள்ளவில்லை. அதனால் நான் எவ்வளவு டூப் போட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு தெரியும், நடிகர்களுக்கு தெரியும். அவர்கள்தான் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும் ரஜினி சார் எனது வாடகை வீட்டிற்கு ஏதாவது உதவ வேண்டும். விஜய் சார் விக்ரம் சார் இவர்கள் எல்லாம் எனக்கு உதவினால் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நான் அஜித் சாரை மிகவும் நம்புகிறேன். ஏனென்றால் அவர் பல பேருக்கு உதவி செய்திருக்கிறார் மற்றும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி நடிகர் ராகவா லாரன்ஸ் எனக்கு உதவி செய்வீர்கள் என நம்புகிறேன்” சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.