தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகிறது.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயல்பு நிலை திரும்பிய பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அஜித் கூறியிருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

செம மாஸாக இருக்கும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களில் சிலர் இதை உண்மை என நம்பி உள்ளனர். ஆனால் உண்மையில் இது ஃபேன் மேட் போஸ்டர்.

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டராக இருந்தாலும் செம மாஸாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.