நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சர்ச்சை தற்போதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து புகார் கொடுத்துள்ளார். இதன் பின்பே வனிதாவின் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி என்ற பெண் தாறுமாறாக வனிதாவை பேசி காணொளியினை வெளியிட்டு வருகின்றார்.

சில காணொளிகளை கண்டும், காணாமலும் இருந்த வனிதா பின்பு பொங்கி எழுந்து சூர்யா தேவியின் டிக் டாக் காணொளியும், அவரது ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு, கஞ்சா விற்பவர் என்று கூறினார்.

பின்பு சூர்யா தேவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வனிதா. ஆனால் சூர்யா தேவியும் வனிதா மீது புகார் அளித்துள்ள நிலையில், இருவரையும் அழைத்து சமாதானம் பேச பொலிசார் முயன்றுள்ளனர்.

பொலிசாரின் மூன்று மணி நேர பேச்சு வார்த்தைக்கு உடன்படாத இருவரும் மீண்டும் பொங்கி எழுந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதும் வனிதாவை விடாமல் துரத்திக்கொண்டு சூர்யா தேவி காணொளி வெளியிட்டு வருகின்றார்.