எந்த நேரத்தில் இந்தியன் 2 படத்தை ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்து ஏழரை சனி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்து 3 பேர் உயிரிழந்தனர்.

படம் ஆரம்பித்ததிலிருந்து அடிக்கடி கமலஹாசனுக்கு அடிபட்டு படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதனால் ஏற்கனவே டென்ஷனில் இருந்த சங்கரிடம் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது லைக்கா நிறுவனம்.

முதல் முதலாக இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அந்த படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடியாம். அதன் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் பட்ஜெட்டை 225 கோடியாக குறைத்து லைகா நிறுவனம்.

சரி. மீதிப் பணத்தில் ஓரளவு நல்ல படத்தை எடுத்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த சங்கருக்கு எமனாக வந்து கொரானா. இதனால் படப்பிடிப்பு பாதியில் தடைபட்டு விட்டது. மேற்கொண்டு படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையில் கமல்ஹாசன் மற்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எப்படியாவது இந்தியன் 2 படத்தை முடித்து விட வேண்டும் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்த சங்கரிடம் மேலும் 50 கோடி பட்ஜெட்டை குறைத்து 175 கோடிக்கு படத்தை எடுத்து தர முடியுமா என கேட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான சங்கர், நீங்களே படத்தை எங்கு எப்படி எடுக்க வேண்டும் என்பது எழுதி கொடுங்கள் என கூறிவிட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களது யூடியூப் தளத்தில் குறிப்பிட்டனர்.