தர்பூசணி பழத்தைத் தான் ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என்று கூறுவோம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஆனால், அதன் விதைகளை தூக்கி குப்பையில் வீசி விடுவோம். அது நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

தர்பூசணி சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை உலர்த்தி சேமித்து வையுங்கள். அது ஒருபோதும் கெட்டுப் போகாது.
அப்படி சேமிக்கப்பட்ட ஒரு கையளவு தர்பூசணி விதையை எடுத்துக் கொண்டு அதை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி குளிரவைத்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
பொதுவாக இதயத்தில் ஏதேனும் பிரச்சினை என்றாலே இவ்வளவு மருத்துவ வசதி வந்துவிட்ட பின்னும் கூட பயம் நன்மைவிட்டு போவதில்லை.
ஏனென்றால் எந்த நேரத்தில் என்ன ஆனுமென்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாகக் குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
இதனால் எந்தவித பக்க விளைவுகள் ஏதும் இல்லையென்பால் முயற்சித்துப் பார்ப்பதில் தவறு ஏதும் இல்லையே.
பெண்களுக்கு நீளமான தலைமுடியும் ஆண்களுக்கு கருகருவென ஆரோக்கியமான, அழகான மற்றும் வலிமையான தலைமுடி இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையே இந்த தலைமுடி உதிர்வது தானே.
வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
தர்பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ள வைட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன.
இது நம்முடைய நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.
தர்பூசணி விதை டீ
தர்பூசணி விதையை உலர வைத்து, வறுத்து பொடி செய்து டீ போட்டு குடித்து வரலாம். இந்த டீயில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.