உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அப்படி கட்டாயம் அனைவரும் முகமூடி அணிய வேண்டும், சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சூப்பிட்டு கழுவ வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில சுவாரசியமான வீடியோக்கள், வேடிக்கையான நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பத்திரிகையாளர் பியான்கா பத்ரே ஒகாசியோ (Bianca Padró Ocasio) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு ஆண் மற்றும் பெண்ணின் அற்புதமான நடன திறமையை ஆடியுள்ளனர்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்களுக்குள் சரியான தூரத்தை பராமரித்து முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். அவர்களின் இயக்கங்களை ஒத்திசைத்து ஒருங்கிணைக்க, இருவரும் கைகளில் இரண்டு கயிறுகளை வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், “காலை வணக்கம். எனது நண்பர் ஒருவர் சமூக தொலைதூர சல்சாவின் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், நான் இப்படி இருக்க முயற்சிக்கிறேன்” என்று ஒகாசியோ அந்த வீடியோவை எழுதி பகிர்ந்துள்ளார்.