கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத கொச்சி மாவட்டம் மராடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘தனக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

சமீபத்தில், பூர்ணாவுக்கு ஒருவர் பழக்கமாகி உள்ளார்.. இவர் டிக்டாக்கில் அறிமுகமானவர்.. அவர் பெயர் அன்வர்.. துபாயில் நகை கடை வைத்திருப்பதாக சொல்லி உள்ளார்.. கோழிக்கோட்டிலும் ஒரு நகை கடை இருக்கிறது என்று சொல்லியே பூர்ணாவை நம்ப வைத்துள்ளார்.. பூர்ணாவை கல்யாணம் செய்ய அளவு கடந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு பூரித்த பூர்ணா, வீட்டில் வந்து முறைப்படி பெண் கேட்க சொல்லி உள்ளார்.. அதன்படியே அன்வர் கடந்த 3-ம் தேதி 6 பேரை அழைத்து கொண்டு பூர்ணா வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்.. ஆனால் அந்த 6 பேரை பார்த்ததும் பூர்ணாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று லேசாக புரிந்தது.. அவர்களின் பேச்சில் வித்தியாசம் தெரிந்தது.

இதனை தொடர்ந்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அப்துல் சலாம் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இவர்களுடைய புகைப்படங்கள் வெளியான பிறகு, இவர்களிடம் ஏற்கனவே ஏமாந்த வேறு சில பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். சிலர், பணம் , நகைகளை பறிகொடுத்துள்ளனர். இன்னும், சிலர் தன்னையே பறிகொடுத்துள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இவர்களால் யாராவது இதற்கு முன்பு பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் எனவும் அப்படி புகார் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.