பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த கும்கி படத்தில் காமெடியனாக நடித்தவர் அஸ்வின். இவர் அண்மையில் ஜோதிகாவுடன் ஜாக்பாட், ஹரிஷ் கல்யாணுடன் தனுஷு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் என்று அண்மையில் தகவல் வெளியானது. தற்போது கொரோனா ஊரடங்கால் யாரும் வெளியே கூட்டம் கூட முடியாத நிலையே உள்ளது.

இந்நிலையில் அவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் வித்யாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் மிக முக்கியமான உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வாழ்த்துக்கள் அஸ்வின் வித்யா தம்பதிக்கு…