தமிழ் சினிமாவில் தோனி, கபாலி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே(Radhika Apte). இவர் ஹிந்தியில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சர்ச்சைக்குரிய காட்சிகளிலும் தாராளமாக தன்னுடைய நடிப்பை வழங்கி வருகிறார். மேலாடை இல்லாமலும் நடித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே.

தற்போது பிரபலமாகி வரும் பல வெப்சீரிஸ்களில் நாயகியாக நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு லண்டன் காதலரை திருமணம் செய்து கொண்ட ராதிகா ஆப்தே தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

லண்டன் தெருக்களில் செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு மேலே வந்து விழுவது தனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஃபிளைட்டில் ஒரு முறை செல்லும்போது ஒரு ரசிகர் பலமுறை தன்னிடம் செல்ஃபி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் வேண்டாம் என திட்டி விட்டு உறங்கி விட்டேன்.

பின்னர் கண் விழித்து பார்த்த போது தன்னுடைய தொலைபேசியை வைத்து தன் முன்னர் செல்பி எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த எனக்கு சரியான டென்ஷனாகி கத்தி விட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாதிரி அத்துமீறும் ரசிகர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது என தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.