நம்பர் நடிகை ஒரு படத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் இவர் வரிசையாக 4 தோல்விப் படங்களைக் கொடுத்து விட்டார். சமீப காலமாக பிரபல இயக்குனருக்கும் இவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

சீக்கிரமே கல்யாணம் ஆகப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம். இவ்வளவு அதிக சம்பளம் கொடுத்தும் பலன் இல்லாமல் போய் விடுகிறதே என்று சில தயாரிப்பாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

எந்த சமயத்திலும் நம்பர் நடிகை திருமணம் செய்து கொண்டு போய் விடலாம் என்று சில பட அதிபர்கள் பயப்படுகிறார்கள். இதனால் நடிகைக்கு புது பட ஒப்பந்தங்கள் குறைய ஆரம்பித்துள்ளதாம்.