தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து, ஹிந்தித் திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்து 80களில் இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி என வர்ணிக்கப்பட்டவர் அந்த மூன்றெழுத்து மூன்றாம் பிறை நாயகி. அதன் பின் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து அந்தப் படத்தையும் வெற்றிப் படமாக்கினார். அவருக்கு இரண்டு மகள்கள், மூத்த மகளை நடிகையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற பேராசையில் இருக்கிறார். சில காலமாகவே அவர் தமிழில்தான் அறிமுகமாக உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், இன்னும் அவர் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படவில்லை. புகழ் போதைக்குள் நுழைவதற்குள்ளாகவே அவர் வேறு ஒரு போதைக்கு அடிமையாகிவிட்டாராம்.

சமீபத்தில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட அவர் போதையில் தள்ளாடும் அரை குறை ஆடையுடன் கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களை மகளேதான் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறாராம். தனக்குத் தெரியாமலேயே இந்தப் புகைப்படங்கள் வெளிவந்து விட்டது என்றும் கனவுக் கன்னி சொல்லியிருக்கிறாராம். இந்த புகைப்படங்களில் கனவுக் கன்னியும் இருப்பதுதான் ஹைலைட் என்கிறார்கள்.

இதற்கு முன்னர் கூட குடும்பமே நீச்சல் உடைகளில் உள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.மகள் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் இந்த பழக்கம் என்றால் அவரை வைத்து யார் படமெடுப்பார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள் பாலிவுட்டினர்…