சன் மியூஸிக்கில் தன் வாழ்கை பயணத்தை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது.

சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா. இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அன்பு உங்களை சுற்றி உள்ளது. அது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் உணர வேண்டும். அது உங்களை கடவுள் போல பாதுகாக்கிறது” என்று தலைப்பு வைத்துள்ளார்.

இதற்கு அவருடைய கணவர் கயல் சந்திரன், என்னையா கடவுள்ன்னு சொல்ற..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அஞ்சனா “நீ தான் என் அன்பு. அன்பே கடவுள்.. அதனால் உன்னை தான் சொன்னேன் ” என்று பதில் கொடுத்துள்ளார்.