காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாறியுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

ஆனால் காசியோ, நானாக எந்த பொண்ணையும் மயக்கவில்லை, அவர்களாக என் அழகில் மயங்கினார்கள், என்னை பயன்படுத்திக் கொண்டனர் என வாக்குமூலம் அளித்துள்ளான்.

இந்நிலையில் காசியின் நண்பனுடைய காதலியையும் மயக்கியது தற்போது தெரியவந்துள்ளது.

நாகர்கோவிலில் நடந்த விழா ஒன்றுக்கு இசை நிகழ்ச்சி குழுவை ஏற்பாடு செய்யுமாறு காசியிடம் கேட்டுள்ளனர்.

அவனும் தன்னுடைய நண்பனது குழுவை ஏற்பாடு செய்ய, அதில் பாடிய நண்பனின் காதலி மீது காசிக்கு ஆசை வந்துள்ளன.

உடனடியாக அப்பெண்ணின் பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்ப, காதலனிடம் காசி பற்றி கூறியுள்ளார் காதலி.

அவனும் காசியிடம் வந்து, அவளை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், விட்டுவிடு ப்ளீஸ் என கெஞ்சியுள்ளார்.

ஆனால் காசி விடவில்லை, அவனுடைய நண்பனுக்கு தன்னுடைய தோழியின் நிர்வாணப்படங்களை அனுப்பி மயக்கியுள்ளான்.

இதற்கிடையே பாடகிக்கு மலேசியாவில் வாய்ப்பு ஏற்படுத்திதர, காசியின் வலையில் விழுந்துள்ளார்.

ஏற்கனவே இருந்த காதல் முறிந்துபோய் காசியிடம் வசமாக சிக்கிக் கொண்டாராம் அந்த இளம் பாடகி.

இப்படி காசி ஏமாற்றிய பெண்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது!… சிபிசிஐடி விசாரணையிலாவது உண்மைகள் வெளிவருமா? என்பதே பலரின் கேள்வியாகவும் இருக்கிறது.