இந்திய கிரிக்கெட் அணியின் பிரப கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்த புத்தாண்டில் ரசிகர்களுக்கு தனது நிச்சயம் குறித்த தகவலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தார். ஆனால், திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவியை கர்ப்பமாக்கி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
தனது நிச்சயம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். அடுத்த, திருமணம் செய்து கொள்வார்கள் என்று பார்த்தால் நேரடியாக அவரது காதலியும், வருங்கால மனைவியுமான நடாஷா என்பவரை கர்ப்பமாக்கி விட்டார் ஹர்திக்.
தனது, காதலி கர்ப்பமாக உள்ளதாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், “நடாஷாவும் நானும் சேர்ந்து சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம்.
உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்க்கையின் புதிய பரிமானத்துக்கு செல்ல ஆச்சரியத்துடன் காத்திருக்கிறோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பின் முதுகுப்பதியில் ஏற்பட்ட காயத்துக்காக லண்டனில் ஹர்திக் பாண்டியா ஆப்ரேஷன் செய்து கொண்டார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள பாண்டியா விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என தெரிகிறது. முன்னதாக இந்தியாவில் நடக்கயிருந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் பாண்டியா அணிக்கு திரும்பயிருந்தார்.
ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அந்த தொடர் ரத்தானது. நடாஷா செர்பியாவைச் சேர்ந்த நடிகையாவார். இவர்களின் நிச்சயம் துபாயில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இவர் இம்ரான் ஹாஸ்மி மற்றும் ரிஷி கபூர் ஆகியோர் நடித்த ‘தி பாடி’ என்ற பாலிவுட் படத்தில் உள்ள பாடலில் நடித்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.