ஐஸ்வர்யா பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ராதிகாவின் அண்ணாமலை சீரியலில் போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார். அந்த சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்று சொல்லலாம்.

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களிலும் சீரியல்களிலும் மாறி மாறி நடித்து வந்தார். ஜோதிகா மாதவன் நடித்த டும் டும் டும் படத்தில் ஜோதிகாவின் தங்கையாகவும், ஏப்ரல் மாதத்தில் படத்தில் சினேகாவின் தோழியாகவும் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
அவர் நடிப்பை விட்டு விலகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் அவரை ஞாபகம் வைத்துக் கொண்டு சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டி எடுத்தது.

அதில்தான் அவர் துபாயில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டதாகவும், ஐஸ்வர்யாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது ஐஸ்வர்யா கனடாவில் சூப்பர் சிங்கர் போன்ற ஒரு பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகவும், அதே நேரத்தில் ஒரு ரேடியோவில் ஆர்ஜே வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.