தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் என்ற இயக்குனரின் படங்களுக்கு எப்போதுமே தனி மரியாதையும் பெரிய அளவு வரவேற்பும் இருக்கும். அதிலும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் சொல்லவே வேண்டாம்.

இவர்களது கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தனர். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறனின் விசாரணை படம் ஆஸ்கர் விருது வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சினிமாக்காரர்களுக்கு புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற விஷயங்களில் கட்டுப்பாடு கிடையாது என்பது சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பெரும்பாலும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறது. ஆனால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அதாவது குறைந்தது ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பாராம். சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் கௌதம் மேனனின் கிளாசிக் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம். அந்த படத்தில் வரும் அப்பா கேரக்டரை பார்த்து தான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டேன் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் எனும் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.