தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு சமீபகாலமாக மார்க்கெட் அதிகமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ரசிக்கும் வகையில் படங்கள் கொடுப்பதால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக இவரது நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் திடீரென தமிழ் சினிமா உலகத்தினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டி வந்த வண்ணம் உள்ளனர். சத்தமே இல்லாமல் ஒரு காரியத்தை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வண்டலூரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள பெரும்பாலான விலங்குகள் சென்னையில் உள்ள பல பணக்காரர்களால் தடுக்கப்பட்டு அதற்கான பராமரிப்புச் செலவுகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த வகையில் வண்டலூர் பூங்காவில் மிகவும் பாப்புலரான அனு என்ற வெள்ளைப் புலி ஒன்றை 2018 ஆம் ஆண்டு முதல் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதற்கான பராமரிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது அதன் பராமரிப்பு செலவுகளை மேலும் நான்கு மாதங்களுக்கு எதிர் கொண்டுள்ளார். அந்த புலியின் ஒரு நாள் செலவு கிட்டத்தட்ட 2,000 ரூபாய் வரை உள்ளது. இதனால் வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.