விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் கொரோனா லாக்டவுனால் படம் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தின் பணிகளும் தொடங்கியுள்ளதாக படத்தை வாங்கியுள்ள 7 ஸ்க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விரைவில் படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளதால் டிரைலர் அல்லது டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அடுத்தமாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதால் அப்போது கண்டிப்பாக ரிலிஸ் தேதியைப் படக்குழு அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.