நாற்பது லட்சம் என்பது உதயநிதியின் அந்தஸ்துக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுகிற அளவுக்கு காஜல் ஒன்றும் விவரம் புரியாதவரும் அல்ல. அப்புறம் எப்படி வந்தது இழுபறி? கொடுக்கல் வாங்கலில் கோக்குமாக்கு? என உள்ளே புகுந்து விசாரித்தால், இந்த ‘பிராது’ ஒரு நாடகம். இதை நடத்தியதே காஜலும், உதயநிதியும் தான்.
‘உங்க படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு தரல. அதனால், நீங்க எனக்கு கொடுத்திருந்த உங்க அட்வான்ஸ் பணத்தை எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று அப்பவே சொல்லிவிட்டாராம் காஜல். அதோடு விட்டாமல், ‘எப்போது வாங்கிக்கிறீங்க?’ என்று தொடர்ந்து நச்சரித்துக் கொண்டேயிருந்தாராம் காஜல். ஒரு கட்டத்தில் அவர் திருப்பி தருவதாக சொன்ன அமவுண்டுக்கும், உதயநிதி கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகைக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்ததாம்.
‘அவ்வளவு கொடுத்தேனே…’ என்று இவர் ஒரு தொகையை சொல்ல, ‘இவ்வளவுதான் வந்து சேர்ந்துச்சு’ என்று காஜல் ஒரு தொகையை சொல்ல, நடுவில் ‘ஸ்வாகா’ செய்த அந்த புண்ணியவான், வேறு யாருமல்ல. காஜலின் மேனேஜர்தான்! பழகுன மனுஷன். நம்ம கூப்பிட்டு கேட்டா நல்லாயிருக்காது. பிரச்சனையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்திருவோம். அப்புறம் வரும் பாருங்க உண்மை என்று பேசி வைத்துக் கொண்டுதான் அடுத்த கட்டத்திற்கு போனார்களாம் இருவரும்.
தற்பொழுது அனைவர் பார்வையும் மேனேஜர் பக்கம் திரும்பியுள்ளது