சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சந்திரமுகி. ரீமேக் படமாக இருந்தாலும் செம ஹிட் அடித்தது.

அந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தன. ரஜினிகாந்துக்கு நிகரான கேரக்டர் என்று கூட சொல்லலாம்.

தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் சந்திரமுகி வேடத்துக்காக நாயகிகளை தேடி வருகின்றனர்.

சந்திரமுகி படத்தை இயக்கிய வாசுவே சந்திரமுகி 2 படத்தையும் இயக்க உள்ளார். சந்திரமுகி 2 படத்திற்காக தற்போது வரை யாரும் என்னை அணுகவில்லை என ஜோதிகா தடால் என அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கமர்சியல் படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் நான் விலகிவிட்டேன் எனவும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலேயே நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜோதிகா தியேட்டர்காரர்களை பகைத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே. இதனால் பெரிய படங்கள் அவரை கமிட் செய்ய விரும்புவதில்லை எனவும் அரசல் புரசலாக செய்திகள் கிடைத்துள்ளது.