‘தாஜ்மஹால்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை ரியா சென், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 1999ல் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரியா சென்.
இந்தப் படத்தில் நடிகர் மனோஜ்க்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தமிழில் நடிகர் பிரசாந்த்துக்கு ஜோடியாக ‘குட்லக்’ என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து ‘அரசாட்சி’ என்ற படத்தில் அர்ஜுடன் இணைந்து நடித்தார்.
பின்னர் மலையாளத்தில் ‘அனந்தபத்ரம்’ என்ற திகில் படத்தில் நடித்திருந்தார்.மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆங்கிலம், ஒரியா ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ரியா சென்னின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்ப்டங்களை பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.