இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா.

இந்த சீரியல் கடந்த சுமார் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் யப்பா சாமி எப்போதான் இந்த சீரியல் முடியும் என்று ரசிகர்கல கடுப்பாகும் அளவுக்கு சென்றது இந்த சீரியல்.

இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகை ரச்சிதா தமிழ் சீரியல் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும், இவர் ‘உப்புக்கருவாடு’ தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்ககு என தனி ரசிகர் வட்டம் உள்ளது. இந்நிலையில் நடிகை ரச்சிதா அடுத்த சீரியலில் எப்போது நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

ஊரடங்கு காரணமாக சமூக வலைதளங்களில் பல நடிகைகள் பிஸியாக உள்ளனர். தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரச்சிதாவும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாவடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேன்ட் போட்டுக்கொண்டு புடவை கட்டியுள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி ட்ரெஸ் இது என்று கூறு வருகிறார்கள்.