தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை கடல் போன்றது.

அவர் தொடர்பாக எந்த தகவல் வெளியானாலும் அதனை இணையத்தில் மாஸாக ட்ரெண்ட் செய்வார்கள்.

இந்நிலையில், விஜய்யின் சில பழைய புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகின. அதில் குறிப்பாக லயோலா கல்லூரியில் விஜய், எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படத்தினை நடிகர் சஞ்சீவ் வெளியிட்டிருந்தார். கல்லூரி நாட்களையும், நண்பர்களையும் நினைவு கூறுவதாக அந்த படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த படத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, வித்தியாசமாக உடை அணிந்து ஸ்டைலிஷாக, காட்சியளிக்கிறார் விஜய். ரசிகர்கள் இந்த படத்தை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.