மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான மஞ்சு வாரியார் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தான் நடத்த முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரையை பதித்தார் அவர். அதனைத் தொடர்ந்து மலையாளப்படங்களில் நடித்துவருகிறார் மஞ்சு.

இந்நிலையில் ஜோபின் டி சாக்கோ இயக்கும், தி பிரைஸ்ட் என்ற மலையாள படத்தில், முதன் முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார், மஞ்சுவாரியர். ஆனால் படத்தில் இருந்து மஞ்சு விலகியதாக ஒரு தகவல்பரவியது. ஆனால் அதற்கு மஞ்சு வாரியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அது உண்மையல்ல என்றும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏன் இப்படி தவறான தகவல் பரவுகிறது என புரியவில்லை என்று கூறியுள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. இதனால், ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.

ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத பாடு படும் திருநங்கைகள் ஊரடங்கில் என்ன செய்ய முடியும். இவருகளுக்கு, உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார்.

மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உங்களுடன் தாராள மனசு யாருக்குமே வராது என்று அவரைபாராட்டி வருகிறார்கள்.