நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தல அஜித் வினோத் மீண்டும் இணைந்திருக்கிற திரைப்படம் வலிமை. இந்த படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா ஒரு வில்லனாக நடக்கிறார். பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். டைட்டில் மட்டுமே இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் ஆரம்பமானது. இதுவரை இரண்டுகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக இனி 2021 பொங்கலுக்குதான் இந்த படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் சமீப சில நாட்களாக இந்த படம் பொங்கலுக்கும் வெளியாகாது, அடுத்து தல அஜித்தின் பிறந்த நாளான மே1 அன்றுதான் வெளியாகும், என்பது போன்ற தகவல்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்த படம் ரிலீஸ் குறித்து, அஜித் ரசிகர்கள் மிகப் பெரிய குழப்பத்திலேயே இருந்து வருகிறார்கள்.

இது பற்றி நாம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இதுவரைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பின் போது, தல அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் 45 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இதில் சில அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் பைக் சேஸ் காட்சிகளும் அடக்கமாம். அடுத்து சக நடிகர்கள் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு 15 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதோடு இதுவரைக்கும் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான எடிட்டிங் வேலைகளும் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது.

அந்த காட்சிகள் சம்மந்தப்பட்ட vfx வேலைகளும், படப்பிடிப்பு நடந்து கொண்டிந்த போதே இன்னொரு பக்கம் நடந்து வந்துள்ளது. அதோடு படத்திற்கான கலர் டோனும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி படப்பிடிப்பு நடக்கும் போதே, எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் நடந்தே வந்துள்ளன. எனவே வலிமை படத்தின் பொங்கல் ரிலீசில் எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது. இனி இந்த லாக்டவுன் முடித்து படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், எந்தெந்த காட்சிகளை எப்படி, எங்கு எடுப்பது என மொத்த திட்டமிடுதலையும் இயக்குனர் வினோத் ரெடியாக வைத்துள்ளாராம்.

அதன்படி எடுக்க வேண்டிய காட்சிக்கு தேவையான நபர்களுக்கு மட்டுமே இனி படப்பிடிப்பு தளத்தில் அனுமதியாம். மற்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதி இல்லையாம். மேலும் முடிந்த அளவுக்கு தனி நபர் இடைவெளியை கடைபிடித்து, படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் முடிந்ததும் ஹைத்ராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்களாம். அங்கு முதன்மை கதாபாத்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.

அதை தொடர்ந்து சென்னை கோகுலம் ஸ்டுடியோஸிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதற்காக ஏற்கனவே பிரம்மாண்டமாக ஜெயில் செட் அங்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறாக வலிமை படக்குழுவினர் பக்காவான திட்டங்களோடு லாக்டவுன் முடிவுக்கு காத்திருக்கிறார்கள். ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டால் உறுதியாக, மீதமுள்ள வேலைகளை முடித்து படத்தை அடுத்த பொங்கலுக்கு வெளியிடுவதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். எனவே 2021 பொங்கல் வலிமை தல பொங்கல் என்பதில் எந்த மாற்றமும் இல்லையாம். என்ன பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா !