2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். திரைத்துறையில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிலேயே உடல் எடைகுறைத்து ஆளே மாறிப்போனார் அம்மணி.
இந்நிலையில், மேலும் கணிசமாக உடல் எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அம்மணி. பொசு பொசுவென இருந்த இவர் தற்போது நச்சுன்னு ஸ்லீம்மான பிறகு சும்மா இருந்தால் எப்படி..? என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
வாவ்…! என வாயை பிளக்க வைக்கும் வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது.