குபேர யோகம், மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் இருப்பவர்களை தேடி செல்வம் தானாக வரும். பிறக்கும் போது எல்லோரும் பணக்காரராக பிறப்பதில்லை. தலைமுறை தலைமுறையாக எல்லோருமே பிசினஸ் மேனாக இருப்பதில்லை. ஏழையாக பிறந்தவர்கள் கூட அதிர்ஷ்டத்தின் மூலம் பணக்காரர்களாக மாறி தலைமுறையை பணக்காரர்களாக மாற்றுகிறார்கள்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.

பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அபரிமிதமாக இருக்கிறதாம். அப்படி என்னதான் காந்த சக்தி அவர்களிடம் இருக்கிறது மற்ற ராசிக்காரர்களால் ஏன் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதில்லை என்று பார்க்கலாம்.

செவ்வாய் ராசிக்காரர்கள்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கடமையை சரியாக செய்வார்கள். பலனை அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். தர்மத்தின் வழியிலும் நியாயமாகவும் பணத்தை சம்பாதிப்பார்கள். அதிகம் கடன் வாங்க மாட்டார்கள். பணம் இவர்களை தேடி வரும். விருச்சிக ராசிக்காரர்கள் பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள். பணத்தின் மீது பற்றும் நேசமும் கொண்டவர்கள் வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள் காலையில் 10 ரூபாய்க்கு வாங்கியதை மாலையில் 100 ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அதே நேரத்தில் சேமிக்க தெரியாது.

சுக்கிரன் ராசிக்காரர்கள்
பணத்தின் அதிபதி, சுகபோகத்தின் அதிபதி சுக்கிரன். இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்கள். பணம்தான் குறிக்கோள், லட்சியம் என ஒடி ஓடி சம்பாதிப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் இருக்கும். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள். எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடுவார்கள். துலாம் ராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகள். பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சேமிக்க தெரியாது. செலவு செய்வதில் மன்னர்கள்.

புதன் ராசிக்காரர்கள்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களும் பணம் எல்லாம் பெரிய விசயமே இல்லை. நிறைய கடன் வாங்கி செலவு செய்வார்கள். கன்னி ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். கடன் வாங்க மாட்டார்கள் அப்படி கடன் வாங்கி விட்டால் அதை கட்டும் வரை தூங்க மாட்டார்கள்.

சூரியன்
சந்திரன் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்கள் பல வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள். வரவுக்கு மேல் செலவு செய்ய மாட்டார்கள். யாருக்கும் கடன் அதிகமாக கொடுக்க மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்களும் பணம் சம்பாதிக்கம் சூட்சமம் தெரியும். தனித்துவமாக பணம் சம்பாதிப்பார்கள். கடன் வாங்கிய பணத்தை கொண்டே சம்பாதித்து அந்த கடனை அடைத்து விடும் கெட்டிக்காரர்கள்.

சனி ராசிக்காரர்கள்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு பணம் பண்ணுவதுதான் குறிக்கோள். சாப்பாடு தூக்கம் இன்றி கூட பணத்தை சம்பாதிப்பார்கள். பணத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர்களுக்கு வட்டியில்லாமல் கைமாற்றாக பணம் தர பலர் தயாராக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் சூட்சமம் தெரிந்திருக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றிகரமானவராக இருந்தாலும் கடனை கட்ட முடியாமல் தவிப்பார்கள்.

குரு ராசிக்காரர்கள்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பெரிய விசயமே இல்லை. பணத்தின் மீது பற்றற்றவர்கள். நேர்மையாக சம்பாதிப்பார்கள். கடன் வாங்கினால் நேர்மையாக கட்டிவிடுவார்கள். மீனம் ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்கள்.

உங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்