இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்.
இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து வழிவிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கொஞ்சம் கிளாமர் காட்டிபுகைப்படங்களை வெளியிட்டு கிளமாராக நடிக்க பச்சைக்கொடி காட்டியுள்ளார் அம்மணி.