தல அஜித் இயக்குனர் வினோத் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தரமான படமாக எடுத்திருந்தார் வினோத். தல அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான படமாக அது அமைந்தது. இதையடுத்து தற்போது இதே கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம்தான் வலிமை. டைட்டில் மட்டுமே இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப் பட்டது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.

இதுவரைக்கும் சில அதிரடியான சண்டை காட்சிகள், ஒரு பைக் சேசிங் காட்சி, ஒரு பாடல், மற்றும் படத்தில் வரும் முக்கியமான ஜெயில் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்திருக்கிறார் வினோத். அதிலும் அஜித் செய்த பைக் சேசிங் மற்றும் இன்னொரு அதிரடியான, ரிஸ்கான சண்டை காட்சி என எல்லாவற்றிலும் டூப் போடாமல் தானே மிரட்டியிருக்கிறார் நம்ம தல. இந்த காட்சிகள் எல்லாமே ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் இருக்குமாம். அந்த வகையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாமே, எதிர்பார்த்ததை விட மிக மிக தரமாக வந்துள்ளதாம். படக் குழுவினருக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு துவங்கும் முன்னரே இரண்டு பாடல்களை முடித்திருந்தார். அதில் தல அஜித் குத்தாட்டம் போடும் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தற்போது இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் யுவன் முடித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து தல ரசிகர்கள் மத்தியில் இருக்கும் அடுத்த மிகப் பெரிய கேள்வி மற்றும் எதிர்பார்ப்பு எல்லாமே, வலிமை First Look போஸ்டர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதுதான். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னரே முதல் பார்வைக்கான போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் இயக்குனர் வினோத். அப்போது அதிலிருந்து மரண மாஸான முன்று லுக்கை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் வினோத், தல அஜித் மற்றும் போனிகபூர் இவர்கள் மூவருக்கும் பிடித்த ஒரு லுக்கை இறுதி செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இதற்கு முன் தல அஜித் எந்த படத்திற்கும் கொடுக்காத ஒரு புது லுக்கை இந்த படத்திற்காக கொடுத்துள்ளாராம். அந்த லுக்கை வைத்து மரண மாஸான first look போஸ்டரும் ரெடியானது. இந்த போஸ்டரை தல அஜித் பிறந்தநாளில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்திருந்தனர். இந்த கொரோனா அதை காலி செய்து விட்டது. இனி இதற்கு அடுத்தபடியாக இந்த போஸ்டர் எப்போதான் வெளியாகும் என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இதை பற்றி நாம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இனி இந்த படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத பாதியில் துவங்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். ஒரு வேளை கொரோனா தாக்கம் குறைந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு ஆரம்பித்தால், அந்த மரண மாஸான First look போஸ்டரை ஜூலை இறுதிக்குள் வெளியிட படக்குழுவினர் இப்போதைக்கு முடிவெடுத்துள்ளனர். கண்டிப்பாக இந்த First look போஸ்டர் வெளியாகும் போது, தல அஜித் ரசிகர்கள் அதை உலகளவில் ட்ரெண்ட் பண்ணி கொண்டாடதான் போகிறார்கள்.

என்ன பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா ?