ஜெயஸ்ரீ குறித்து கண்ணீருடன் பிக் பாஸ் கஸ்தூரி பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஒரு தாய்மையின் பரிதவிப்பும், துடிப்புமாக கஸ்தூரி அடிமனசில் இருந்து கதறி கொண்டு பேசியுள்ளார்.

வீடியோ “குழந்தைங்க அது.. அந்த வீடியோ பாத்தீங்களா? இறக்கிற தருவாயில்கூட ரொம்ப இன்னசென்ட்டா பேசுது அந்த குழந்தை.. தெறி படத்துல கூட இப்படி வரும்.

அதை நான் சினிமாவுல தான் பார்த்திருக்கேன்.. நிஜத்துல இப்படி நடந்தா யாருமே நம்ப மாட்டாங்க. ஆண்கள் மனது இப்படியா? சத்தியமா லேடீஸ்க்கு இப்படி செய்ய தோணுது.. இவங்க ஆண்களே இல்லை, மனுஷங்களே இல்லை.

நம் நாட்டுல மிருகங்களுக்குன்னு தனியா சட்டம் வேணும்.. மனுஷங்களுக்கு தரும் தண்டனையை இவங்களுக்கு தர கூடாது. இது எதுக்காக செஞ்சிருக்காங்கன்னா, முதலில் குடிபோதை.. ஒருவேளை தெளிவா இருந்திருந்தால் கொஞ்சம் ஈவு, இரக்கம் இருந்திருக்குமான்னு தெரியல.

மொதல்ல மனசாட்சியை பொதைக்கணும்னா அது மதுவால்தான் முடியும். அந்த மதுவை நமக்கு சப்ளை பண்றதே அரசாங்கம்தான். 2 நாள் திறந்துவிட்டாங்க, ஊர்ல இருக்கிறவன் எல்லாம் ஃபுல் ஸ்டாக் வாங்கி வெச்சிக்கிட்டான்.

அரசாங்கம் முதல் குற்றவாளி அரசாங்கம்தான்.. 2வது குற்றவாளி இந்த மாதிரி ஆட்கள். தனியா ஒரு குழந்தை இருக்கு, சந்தர்ப்பம் நமக்கு ஆதரவா இருக்குங்கிறதை தெரிஞ்சுதான் பெட்ரோல் ஊத்தி தீ வெச்சு, வீட்டையும் பூட்டிட்டு போயிருக்காங்க.

இதுதான் இருக்கிறதுலயே மிருகத்தனமான செயல். இபிகோவில் இதுக்கெல்லாம் தண்டனை இல்லை. ஏன்னா நமது அதிகபட்ச தண்டனை மரண தண்டனைதான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.