2டி எண்டர்டென்ய்ன்மென்ட்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்னா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரை போற்று’. இப்படத்தினை படப்பிடிப்பு நிறைவடைந்து மார்ச் மாத இறுதியில் படத்தினை வெளியிட திட்டமிடப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் VFX காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு அனுமதித்திருந்தது.
சூரரை போற்று’ படத்தின் VFX காட்சிகள் மும்பையிலுள்ள ஓர் நிறுவனம் பணியாற்றி வருகிறது. மும்பையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இன்னும் அந்த மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. இதனால் அந்த பணிகளை தொடர முடியாத சோகத்திலிருக்கிறாராம் சூர்யா.