பெரும்பாலான நடிகைகள் திரைக்கு பிரபலங்கள் ஆன பின்புதான் தங்கள் உடைகளில் மாற்றம் கொண்டு வருவார்கள். அதிலும் தங்கள் மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து தான் கவர்ச்சியாக நடிப்பதா..? அல்லது குடும்பப்பாங்காக நடிப்பதா..? என்றே யோசிப்பார்கள்.

நிலைமை இப்படி இருக்க தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, தற்போது கவர்ச்சி ஆடைகளில் உலாவருகிறார். பிரபல தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார் இவர்.

சில படங்களில் நடித்ததும், கமிட்டாகியும் வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில், காலில் பெரிய கட்டு ஒன்றை போட்டுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். லாக் டவுன் ஆரம்பித்த சில நாட்களில் ஏற்பட்ட விபத்து என்றும் ஏற்கனவே கவலையில் இருக்கும் உங்களை மேலும் கவலைப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்த புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், கருப்பு நிற கவுன் போன்ற உடையில் அவர் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் வயசு தான் 34. ஆனாலும், அழகு தான் சார் என்று கைதி கார்த்தி கணக்காக உருகி வருகிறார்கள்.