தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தொடர்ந்து விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

வெற்றிமாறன் சொன்ன கதை விஜய்க்கும் பிடித்துப் போக இந்த கூட்டணி உறுதி என பேசப்பட்டு வந்தது. ஆனால் திடீரென வந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

வாடிவாசல் என்ற படத்திற்காக வெற்றிமாறன் சூர்யாவுடன் கூட்டணி அமைத்தார். இதனால் விஜயின் அடுத்த படம் முருகதாஸுடன் தான் என முடிவானது.

எல்லாம் கைகூடி இறுதியில் வெற்றிமாறன் விஜயை இயக்காமல் போனதற்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது விஜய் அடுத்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் உடன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் இடம் கொடுக்கலாம் என விஜய் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் அடுத்த படத்தை கலைப்புலி எஸ் தாணுவிற்கு இயக்கி தருவதாக வாக்கு கொடுத்துளளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாட்டால் இப்படம் கை நழுவி உள்ளது.