நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள், இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.

நடிகர் ரஜினிகாந்த இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணத்தினால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன் கடந்த 2019ல் ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.